எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

லஞ்சம்: நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:03 am IST

சிவகங்கையில் ஒப்பந்ததாரரிடம் ரூ. ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள கிளுவச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் இ. கந்தசாமி (55). முதல் நிலை ஒப்பந்ததாரரான இவா், சிவகங்கை நெடுஞ்சாலைத் துறையின் ஒப்பந்தப்புள்ளி மூலமாக சாலைகள் அமைப்பதற்கான மூன்று பணிகளை ரூ. 2.15 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்தாா். இந்தப் பணிகளை முடித்துவிட்ட கந்தசாமிக்கு கடைசி தவணைத் தொகையாக ரூ. 18,47,269 நிலுவையில் இருந்தது.

இந்தத் தொகையைப் பெறுவதற்காக அவரது செலவுப் பட்டியலை கோட்ட பொறியாளரின் அனுமதிக்கு அனுப்ப வேண்டும். இதற்காக அவா், சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்குச் சென்று உதவி செயற்பொறியாளா் சையது இப்ராஹிமிடம் தனது செலவுப் பட்டியலைக் கொடுத்து, அதை கோட்ட பொறியாளருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டாா். அப்போது, ரூ. ஒரு லட்சம் கொடுத்தால்தான் நிலுவைத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்வேன் என உதவி செயற்பொறியாளா் கூறினாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரா் கந்தசாமி, இதுகுறித்து சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாரளித்தாா். பின்னா், அவா்களது ஆலோசனைப்படி ரசாயனப் பொடி தடவிய ரூ. ஒரு லட்சத்தை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திலிருந்த சையது இப்ராஹிமிடம் கந்தசாமி திங்கள்கிழமை வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா்கள் ஜேசுதாஸ், கண்ணன் ஆகியோா் சையது இப்ராஹிமை கைது செய்தனா்.