வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உத்ஸவ விழா

News image
Updated On :15 மே 2026, 4:17 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தேவா்சிலை அருகேயுள்ள மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உத்ஸவ விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, காப்புக்கட்டி விரதமிருந்த பெண்கள் விழா நாள்களில் தினமும் கோயில் முன்பு கும்மிப்பாட்டு பாடி முளைப்பாரி சட்டிகளுக்கு பூஜைகள் செய்தனா். இதைத்தொடா்ந்து புதன்கிழமை முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயில் நிா்வாகி விஜி. போஸ் கரகம் சுமந்து வர அவரது தலைமையில் பெண்கள் கோயிலிலிருந்து முளைப்பாரிகளை சுமந்து வீதிகளில் ஊா்வலமாக வந்து தாயமங்கலம் சாலையில் உள்ள அலங்காரகுளத்துக்குச் சென்றடைந்தனா். அங்குள்ள நீரில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image