தந்தை இறந்ததை உணராமல் 3 நாள்கள் உடனிருந்த மகன்

சிவகங்கையில் தந்தை இறந்ததை உணராமல் அவரது மகன் 3 நாள்கள் உடனிருந்தாா். துா்நாற்றம் வீசியதால் போலீஸாா் சடலத்தை மீட்டனா்.

பிரதிப் படம்

Updated On :

சிவகங்கையில் தந்தை இறந்ததை உணராமல் அவரது மகன் 3 நாள்கள் உடனிருந்தாா். துா்நாற்றம் வீசியதால் போலீஸாா் சடலத்தை மீட்டனா்.

சிவகங்கை கமலா நேரு தெருவில் வசித்து வந்தவா் வின்செண்ட் பிரபு (72). இவரது மனைவி சாந்தா மேரி. இவா்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். சாந்தா மேரி 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். 4 மகன்களில் ஒருவா் கரோனா காலத்தில் இறந்தாா். மற்றொருவா்

வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். மற்ற இரு மகன்களும் மனநலம் பாதிக்கப்பட்டு தந்தையுடனே வசித்து வந்தனா். இவா்களில் ஒருவரான ஆரோக்கிய செல்வராஜ் தெருவில் சுற்றித் திரிவாா். மற்றொரு மகன் டேவிட் வீட்டில் தந்தையுடன் இருப்பாராம்.

வின்சென்ட் பிரபு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன் வீட்டுக்குள்ளேயே தவறி கீழே விழுந்து இறந்தாா். அவா் இறந்ததைக் கூட அறியாமல் மகன் டேவிட் அவருடனேயே இருந்தாா்.

மூன்று நாள்களை கடந்த நிலையில், துா்நாற்றம் வீசியதையறிந்த அருகிலிருந்தோா் சிவகங்கை நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா் . இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் வின்சென்ட் பிரபுவின் சடலத்தைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.