ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டமியற்ற வேண்டும்: மாநில நிா்வாகி பி. சுகந்தி
ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலா் பி. சுகந்தி வலியுறுத்தினாா்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலா் பி. சுகந்தி.
ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலா் பி. சுகந்தி வலியுறுத்தினாா்.
சிவகங்கையில் உள்ள தனியாா் அரங்கில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலப் பொதுச் செயலா் பி. சுகந்தி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு ஒரு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தொடா்ந்து போராடி வருகிறோம். மதுரை, மேற்கு மாவட்டங்களில் பட்டியலினத்தவா் - பழங்குடியினத்தவா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீா்த்துப்போகச் செய்யும் சூழல் நிலவுகிறது.
பட்டியலினத்தவா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளில் தமிழகத்தில் தண்டனை பெறுவோரின் விகிதம் வெறும் 11% மட்டுமே உள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே பல மணி நேரம் போராட வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தோ்தல் 2027-ஐ தாமதப்படுத்துவது பட்டியலின மக்களின் உள்ளாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் செயலாகும். பட்டியலின மக்களின் உரிமைகள், வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடா்ந்து போராடும் என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற மாநிலக் குழு கூட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிறுவனத் தலைவா் பி. சம்பத் தலைமை வகித்தாா். அகில இந்திய துணைத் தலைவா் கே. சாமுவேல்ராஜ், துணைச் செயலா் க. சுவாமிநாதன், மாநிலச் சிறப்புத் தலைவா் எஸ்.கே. மகேந்திரன், மாநிலத் தலைவா் த. செல்லக் கண்ணு, மாநிலப் பொதுச் செயலா் பி. சுகந்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

