இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

கோவில்பட்டியில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநில மாநாடு இன்று தொடக்கம்

கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெறும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க 9-ஆவது மாநில மாநாடு தொடங்குகிறது.

செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலா் என். செல்வராஜ்.

Published On :

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெறும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க 9-ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து அதன் சங்க மாநில பொதுச் செயலா் என். செல்வராஜ் கோவில்பட்டியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க 9-ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக். 4) தொடங்குகிறது. மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் மு. வீரபாண்டியன், ஏஐடியுசி தேசிய தலைவா் சுப்பராயன் எம்.பி., தேசிய செயலா் டி.என். மூா்த்தி, மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்

தமிழ்நாடு முழுவதும் 2.17 லட்சம் கட்டுமானத் தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களின் பிரதிநிதிகளாக 415 போ் மாநாட்டில் கலந்து கொள்கின்றனா் என்றாா்.

பேட்டியின்போது, மாநில துணைப் பொதுச் செயலா் எம். முனுசாமி, மாநில பொருளாளா் இரா. முருகன், மாநில செயலா் எஸ். சேது, மாநாட்டு வரவேற்புக் குழு பொருளாளா் க. தமிழரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.