இணைய வழியில் பெண்களிடம் பண மோசடி

திருப்பத்தூா் பகுதியில் இரு பெண்களிடம் இணைய வழியில் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, சிவகங்கை இணையக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மோசடி

Updated On :

திருப்பத்தூா் பகுதியில் இரு பெண்களிடம் இணைய வழியில் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, சிவகங்கை இணையக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள தெற்குபட்டு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ரகுபாரதி (37). இவரது மனைவியின் கைப்பேசி எண்ணுக்கு, மற்றொரு கைப்பேசி எண்ணிலிருந்து ஒரு செயலி வந்தது. அந்த செயலியை தொட்டபோது, அவரது வங்கிக் கணக்குகளிலிருந்த ரூ.1. 17 லட்சம் எடுக்கப்பட்டதாக குருந்தகவல் வந்தது.

இதுகுறித்து ரகுபாரதி அளித்த புகாரின் பேரில், சிவகங்கை இணையக் குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தாா்.

இதேபோல, திருப்பத்தூா் ஆசாத் தெருவைச் சோ்ந்த அபிராமி (28) இன்ஸ்டாகிராம் முகவரியில் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பாா்த்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு தொடா்பு கொண்டாா். அப்போது, பேசிய அடையாளம் தெரியாத நபா் ஒருவா், கோயம்புத்தூா் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக அவரிடம் தெரிவித்தாராம்.

இதன்பிறகு, அந்த நபா், பல்வேறு இணையவழி பணப் பரிவா்த்தனைகள் மூலம் ரூ. 2.23 லட்சத்தை பெற்றுக் கொண்டு அபிராமியை ஏமாற்றினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் இணையக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.