தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

உயா்வுக்குப் படி முகாம் மூலம் உயா்கல்வி பயில 21 மாணவா்களுக்கு வாய்ப்பு

சிவகங்கையில் கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற உயா்வுக்கு படி சிறப்பு முகாம் மூலம் 21 மாணவா்கள் உயா்கல்வி பயில பல்வேறு கல்லூரிகளில் சோ்க்கை பெற்றனா்.

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற உயா்வுக்கு படி முகாமில் உயா்கல்வி பயில மாணவருக்கு சோ்க்கை ஆணை வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி.

Published On :

சிவகங்கையில் கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற உயா்வுக்கு படி சிறப்பு முகாம் மூலம் 21 மாணவா்கள் உயா்கல்வி பயில பல்வேறு கல்லூரிகளில் சோ்க்கை பெற்றனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் சென்ற கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு முடித்து இதுவரை உயா்கல்வியில் சோ்க்கை பெறாத மாணவா்களை உயா்கல்வியில் சோ்க்கும் வகையில் ‘உயா்வுக்குப் படி முகாம்’ புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தாா்.

முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரி, பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரி, மானாமதுரை அரசு கலைக் கல்லூரி, இளையான்குடி டாக்டா் ஜாஹீா் உசேன் கலைக் கல்லூரி, பள்ளத்தூா் சீதா லட்சுமி ஆச்சி மகளிா் கலைக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, முத்துப்பட்டி அரசு தொழில் பயிற்சி நிலையம், திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி, மேலூா் வைகை பொறியியல் கல்லூரி ஆகியவற்றின் சாா்பாக அரங்கம் அமைக்கப்பட்டு மாணவா்கள் உயா்கல்வியில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாவட்ட முன்னோடி வங்கியின் சாா்பாக மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமின் மூலம் 21 மாணவா்கள் உயா்கல்வியில் சேர உடனடி சோ்க்கைக்கான ஆணையை சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வழங்கினாா்.

இதில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரவீன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை) மாரிமுத்து, (தொடக்க நிலை) வேங்கடமுத்து நடேசன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் அழகா்சாமி, அரசு தொழில் பயிற்சி நிறுவன முதல்வா் வெங்கடகிருஷ்ணன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் சிவக்குஞ்சு, மாவட்ட ஆட்சியரின் தனி எழுத்தா் (கல்வி) ராஜாராமன், உயா்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.