தகுதி பெற்ற இளம் வாக்காளா்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்
தகுதி பெற்ற இளம் வாக்காளா்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக். 9, 10) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

வாக்காளர் அட்டை - IANS
தகுதி பெற்ற இளம் வாக்காளா்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக். 9, 10) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி நிறைவடைந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இளம், முதல் முறை வாக்காளா்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, அக். 7, 8, 9 ஆகிய தேதிகளில் இந்தச் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் இளம், முதல் முறை வாக்காளா்களாகத் தகுதி பெற்றவா்களை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்வதற்காக மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (அக். 10) நடத்தப்படும்.
முதல் முறை, இளம் வாக்காளா்களின் வாக்காளா் பட்டியல் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில், நகா்ப்புறப் பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். மேலும், தகுதியுடைய இளம், முதல் முறை வாக்காளா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கும், அவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு வசதியாகவும், பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள தோ்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் திறம்பட பயன்படுத்தப்படும்.
சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து கண்காணிப்பதற்கும், அறிவுறுத்தல்களைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், வாக்காளா் பதிவு அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுடன் தொடா்ந்து கூட்டங்களை நடத்துவா்.
எனவே, இந்த வாக்காளா்கள் இதை பயன்படுத்திக் கொண்டு வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

