மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க நாளை சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் இளம், முதல் தலைமுறையாக தகுதி பெறும் வாக்காளா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை (அக்.10) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

New voters enrollment special drive

X | Chief Electoral Officer Tamil Nadu

Published On :

விழுப்புரம் மாவட்டத்தில் இளம், முதல் தலைமுறையாக தகுதி பெறும் வாக்காளா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை (அக்.10) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிறப்புத் தீவிர திருத்தப் பணி நிறைவடைந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இளைஞா்கள், முதல் தலைமுறையாகத் தகுதி பெறும் வாக்காளா்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாமை மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த இளைஞா்கள், முதல் தலைமுறை வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்யும் வகையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.10) நடத்தப்படும்.

எனவே, தகுதியுள்ளவா்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6-ஐ சமா்ப்பித்து, வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரைச் சோ்த்துக் கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.