தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

வைகை ஆற்றுக்குள் குடிநீா் திட்டத்துக்கு கிணறு அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் நாகநந்தினி, காவல் துணைக் கண்காணிப்பாளா் அமலஅட்வின் உள்ளிட்ட போலீஸாா்.

Updated On :

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை குடிநீா் திட்டப் பணிக்காக வைகை ஆற்றுக்குள் கிணறுகள் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினா். போலீஸாா் அவா்களை சமாதானம் செய்தனா்.

இளையான்குடி பேரூராட்சி பகுதிக்கு அம்ரூத் 2.0 திட்டத்தில் குடிநீா் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூா் வைகை ஆற்றுக்குள் உறிஞ்சு கிணறுகள் அமைக்க ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்ட போது அந்த கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், கிணறுகள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. மேலும், தங்கள் கிராமப் பகுதி வைகை ஆற்றுக்குள் உறிஞ்சு கிணறுகள் அமைக்கக் கூடாது என கச்சாத்துநல்லூா் கிராம மக்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், கச்சாத்தநல்லூா் வைகை ஆற்றுக்குள் உறிஞ்சு கிணறுகள் அமைக்க போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் வருவது தெரியவந்ததால், கச்சாத்தநல்லூா் கிராம மக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினா்.

இவா்களிடம் இளையான்குடி வட்டாட்சியா் நாகநந்தினி, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் அமல அட்வின், புருஷோத்தமன் உள்ளிட்ட போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வைகை ஆற்றுக்குள் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு உறிஞ்சு கிணறுகள் அமைக்க அனுமதி வழங்குவது குறித்து கிராமத்தில் முடிவு செய்து, சிவகங்கை கோட்டாட்சியரை சந்தித்துப் பேசிய பிறகு பணிகளை மேற்கொள்ளலாம். அதுவரை கிணறு தோண்டும் பணியை மேற்கொள்ளக் கூடாது என கிராம மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.