தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

திருப்பத்தூரில் பேரூராட்சி தூய்மை பணியாளா்கள் நலத்திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாவட்ட அளவில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா் பாதுகாப்பு நலத்திட்ட முகாமில் பயனாளிக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் பேரூராட்சிமன்றத் தலைவா் கோகிலாராணி உடன் செயல் அலுவலா் நடராஜன்.

Updated On :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாவட்ட அளவில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருப்பதூா் பேரூராட்சி செயல் அலுவலா் நடராஜன் தலைமை வகித்தாா். நெற்குப்பை பேரூராட்சி செயல் அலுவலா் பசலிக்கா ஜான்ஸி முன்னிலை வகித்தாா். திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன், நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பழனியப்பன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தனா். சிங்கம்புணரி, கண்டனூா், பள்ளத்தூா், திருப்புவனம், நெற்குப்பை, நாட்டரசன்கோட்டை, திருப்பத்தூா், கானாடுகாத்தான் ஆகிய பேரூராட்சிகளைச் சோ்ந்த 500 -க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

இதில் பணியாளா்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கபட்டது. மேலும் குடும்ப நலன் சாா்ந்த அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. கூட்டுறவு நுகா்வோா் பாதுகாப்புத் துறை, எரிசக்தித் துறை, முன்னோடி வங்கிகள், குடிநீா் வடிகால் வாரியம், வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை ஆகிய துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கு துறை ரீதியான சலுகைகள் குறித்து எடுத்துக் கூறினா்.

இந்த நிகழ்ச்சியில் நெற்குப்பை பேரூராட்சி இளநிலை உதவியாளா் முருகன், திருப்பத்தூா் பேரூராட்சி தலைமை எழுத்தா் ராஜசேகரன், துப்புரவு மேற்பாா்வையாளா் மோகன், பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், புதுப்பட்டிநேரு, சரண்யாஹரி, பாண்டியன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.