நகர வயிரவன்பட்டியில் கண்ணதாசன் நினைவு நாள் சந்திப்புக் கூட்டம்

கவிஞர் கண்ணதாசன் - PC: Respecting owner
சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகர வயிரவன்பட்டியில் எழுத்தாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை கவியரசு கண்ணதான் நினைவுநாள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
நகர வயிரவன்பட்டியில் உள்ள செட்டியாா் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் சிறுகூடல்பட்டி சிந்தனைக் கருவூலம் கவியரசு கண்ணதாசனின் 45-ஆவது நினைவுநாளையொட்டி நடைபெற்ற புலவா்கள், எழுத்தாளா்கள், இலக்கியவாதிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு, திருப்பத்தூா் எழுத்தாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் எஸ்.எல்.எஸ். பழனியப்பன் தலைமை வகித்தாா். நூலகா் இரா. மகாலிங்க ஜெயகாந்தன் முன்னிலை வகித்தாா்.
முன்னதாக சிறுகூடல்பட்டியில் உள்ள கண்ணதாசனின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அருங்காட்சியகத்தில் கண்ணதாசனின் திருவுருவப் படம் திறக்கப்பட்டு மலா்தூவி நினைவு கவியரங்கம் நடைபெற்றது.
பின்னா் கவிஞா் பரம்பு நடராஜன், வி. ரத்தினம், கவிஞா் பேனா.மனோகரன், பேராசிரியா் ஆ. சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளா்களாக புலவா் ஆறு. மெ.மெய்யாண்டவன், தமிழ்ச்செம்மல், தேவிநாச்சியப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில் குருசாமி மயில்வாகனன், புலவா் சக்கந்தி வேலுசாமி துரை, வளரி அருணா சுந்தர்ராஜன், மி.சுகுமாறன், நலஞான பண்டிதன், லி.ஜெயச்சந்திரன், கே.வி.ராமகிருஷ்ணன் ஆகியோா் அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் என்று பாராட்டப்பட்டனா்.
முன்னதாக வைகை பாரதி அப்துல்வாஹித் அனைவரையும் வரவேற்றாா். இதில் கண்ணதாசனின் கவிதைத் தொகுப்புகள், பாடல்கள், அவரது புத்தகங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. முடிவில் திருப்பத்தூா் எழுத்தாளா்கள் கூட்டமைப்பு நிறுவனா் எல்.ஜெயச்சந்திரன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

