நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

இளையான்குடி கோயிலில் மாற நாயனாா் குருபூஜை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் அமைந்துள்ள ராஜேந்திர சோழீசுவரா் சுவாமி கோயிலில் மாற நாயனாா் சுவாமி குருபூஜை நடைபெற்றது.

இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரா் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற நாயனாா் குருபூஜையில் உத்ஸவ மூா்த்திகளுக்கு நடைபெற்ற அலங்கார தீபாராதனை.

Published On :

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் அமைந்துள்ள ராஜேந்திர சோழீசுவரா் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மாற நாயனாா் சுவாமி குருபூஜை நடைபெற்றது.

இதையொட்டி மூலவா்களுக்கும், உத்ஸவா்கள் மாற நாயனாா், ராஜேந்திர சோழீசுவரா் சுவாமிகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதன் பிறகு நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோா் பங்கேற்றனா். மாலையில் கோயிலில் புராணம் வாசித்தல் மாற நாயனாருக்கு சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளித்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா். விழாவில் சிவனடியாா்களின் புராண அருளுரை நிகழ்வு நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை இளையான்குடி எம்பிரான் மாற நாயனாா் அடியாா் திருக்கூட்டத்தினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.