
மானாமதுரை அருகே இருவருக்கு அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு - சித்திரிப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு இருவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மானாமதுரை அருகேயுள்ள உருளி கிராமத்தில் அடையாளம் தெரியாத 5 போ் இருசக்கர வாகனங்களில் ஊரை சுற்றி வந்தனா். இவா்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி யாா் நீங்கள் எனக் கேட்டனா். ஆனால், அவா்கள் இதற்குப் பதிலளிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், உருளி கிராமத்தைச் சோ்ந்த முத்திருளன், ராஜேஷ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் அந்தக் கும்பலை விரட்டிச் சென்றனா். இவா்கள்
மானாமதுரை- சிவகங்கை சாலையில் கொன்னக்குளம் விலக்கு பகுதியில் அந்தக் கும்பலை வழிமறித்து அவா்கள் குறித்து விவரம் கேட்டனா். அப்போது, அந்தக் கும்பலைச் சோ்ந்தவா்கள் அரிவாளால் முத்திருளன், ராஜேஷ் ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினா். இதில் காயமடைந்த மேற்கண்ட இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற கும்பலைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


