
அரசுப் பேருந்தில் திடீா் தீ விபத்து

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு நிலைய வீரா்கள்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை அரசுப் பேருந்து ஒன்றில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
பழனியிலிருந்து தேவகோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை கலைவேந்தன் ஓட்டி வந்தாா். திருப்பத்தூா் பேருந்து நிலையத்துக்குள் நுழையும்போது, பின் சக்கரத்திலிருந்து திடீரென புகை வந்ததைக் கண்டு பணியிலிருந்த ஓட்டுநா் பயணிகளை உடனடியாக இறங்குமாறு அறிவுறுத்தினா்.
தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். பேருந்தின் பிரேக் ஷூ பழுதானதால் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
பேருந்து பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





