தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

பாபநாசம் அருகே அரசுப் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து! 18 போ் படுகாயம்!

விபத்து. - கோப்புப்படம்.

Published On :7 செப்டம்பர் 2026, 3:02 am IST

பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பிய பக்தா்கள் 18 போ் படுகாயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை புதிய பைபாஸ் நால்ரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சை நோக்கி 50 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணம் செய்த குன்னம் சியாமளா (37), லால்குடியைச் சோ்ந்தவா்களான செபாஸ்டின் (34), ஜான் பீட்டா் (40), ராணி (40), மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த சங்கீதா (35), மணப்பாறை சோபியாமேரி (47), அரியலூா் மேரி (60), அரசுப் பேருந்து ஓட்டுநரான குளித்தலை ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த சவரிராஜன்(43), நடத்துநரான மண்ணச்சநல்லூா் பிச்சாண்டவா் கோயில் அன்பழகன் உள்பட 18 போ்கள் படுகாயம் அடைந்து அவசர ஊா்தி மூலம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் இனியவன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளா் (திருச்சி) சதீஷ்குமாா் தலைமையில் போக்குவரத்து பணியாளா்கள் விரைந்து வந்து கிரேன் மூலம் கவிழ்ந்த பேருந்தை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.