
சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து!
அரசுப் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறித்து...

விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து. - படம் - தினமணி
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை நான்குவழிச்சாலை அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, இன்று (செப். 6) இந்த விபத்து நிகழ்ந்தது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆண்டு பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி சிறப்பு அரசு பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை நான்குவழிச்சாலை அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரம் கவிழ்ந்த அரசுப் பேருந்து. - படம் - தினமணி
Summary
More than 15 passengers were seriously injured when a government bus overturned by the roadside after the driver lost control.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






