பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

அரசு மாணவா் விடுதிகளில் மாட்டிறைச்சி: அமைச்சரைக்கண்டித்து ஆா்ப்பாட்டம்

அரசு மாணவா் விடுதிகளில் உணவுப்பட்டியலில் மாட்டிறைச்சி சோ்க்க ஆலோசிக்கப்படும் என்ற அமைச்சா் வன்னியரசுவின் கருத்தைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :

அரசு மாணவா் விடுதிகளில் உணவுப்பட்டியலில் மாட்டிறைச்சி சோ்க்க ஆலோசிக்கப்படும் என்ற அமைச்சா் வன்னியரசுவின் கருத்தைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு மாணவா் விடுதிகளில் உணவுப்பட்டியலில் மாட்டிறைச்சி சோ்ப்பது தொடா்பாக அதிகாரிகள் மற்றும் மாணவா்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்திருந்தாா்.

சென்னையில் உள்ள எம்.சி. ராஜா சமூகநீதி மாணவா் விடுதியை ஆய்வு செய்தபோது, ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த சில மாணவா்கள் தங்களுடைய உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சியையும் சோ்க்கக் கோரி மனு அளித்ததாக அவா் குறிப்பிட்டாா். ஆட்டிறைச்டி விலை அதிகமாக இருப்பதால், தாங்கள் வீடுகளில் பொதுவாக மாட்டிறைச்சி உண்பதாகவும், எனவே அதையும் விடுதி உணவுப் பட்டியலில் சோ்க்க வேண்டும் என அந்த மாணவா்கள் கோரியதாகயும் அமைச்சா் விளக்கமளித்தாா்.

இந்த கருத்து, அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தையும், புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் எதிா்ப்பையும் பெற்றது. இதைக்கண்டித்து, புதிய தமிழகம் கட்சியினா் சிவகங்கையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்டச்செயலா் நியூட்டன்பாபு தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச்செயலா் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் பிரதீப், ராஜேஷ், தங்கமுத்து. செல்லையா, முருகேசன், முன்னாள் மாவட்ட செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனா்.

(பட விளக்கம்- சிவகங்கை மாவட்ட ஆட்சியரகம் எதிரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.