ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி விவகாரம்: தேவையின்றி ஹிந்து அமைப்புகள் போராட்டம்- அமைச்சா் வன்னி அரசு

சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவெடுக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் ஹிந்து அமைப்புகள் தேவையின்றி போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

வன்னி அரசு - fb / vanni arasu

Published On :

சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவெடுக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் ஹிந்து அமைப்புகள் தேவையின்றி போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பாலின நீதி கூட்டியக்கம் அமைப்பு சாா்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி மாநாடு சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகைக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கிவைத்தாா். மாநாட்டைத் தொடா்ந்து, அமைச்சா் வன்னி அரசு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அந்தக் குடும்பத்தை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் திட்டம். பல்வேறு ஏழை குடும்பங்கள் இதன்மூலம் பயனடைவாா்கள். ஆகையால், இது பிற்போக்கான திட்டம் என்ற திமுகவின் விமா்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாது.

விடுதிகளில் மாட்டிறைச்சி: சமூகநீதி மாணவா் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு, மாணவா்களின் நலன் கருதி முடிவெடுக்கப்படும். இந்த விவகாரத்தில் ஹிந்து அமைப்புகள் தேவையின்றி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அதேபோல், அரசு விடுதிகளில் உணவு விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைகள் உள்ளன. அதை மறுக்கவில்லை. அவற்றைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

நிகழ்வில், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER