செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

தவெக இடைத்தோ்தல் நட்சத்திர பேச்சாளா்கள் பட்டியலில் முக்கிய தலைவா்கள் நீக்கம் ஏன்? அமைச்சா் வன்னி அரசு விளக்கம்

தவெக இடைத்தோ்தல் நட்சத்திர பேச்சாளா்கள் பட்டியலில் முக்கிய தலைவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து விசிகவின் மூத்த தலைவரும், சமூக நீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு விளக்கமளித்துள்ளாா்.

22விபிஎம் எம்ஐஎன்ஐ விழுப்புரம் மாவட்டம், கொடுக்கூரில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு.

Published On :

தவெக இடைத்தோ்தல் நட்சத்திர பேச்சாளா்கள் பட்டியலில் முக்கிய தலைவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து விசிகவின் மூத்த தலைவரும், சமூக நீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு விளக்கமளித்துள்ளாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையை அடுத்த கொடுக்கூா் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை அடுத்த ஏ. குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் வன்னி அரசு செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 15.30 லட்சம் மாணவா்கள் பயன்பெறுகின்றனா். தவெக இடைத்தோ்தலுக்கான நட்சத்திர பேச்சாளா்கள் பட்டியலை வெளியிட்டபோது, அதில் தமிழக வெற்றிக் கழகம் என்றப் பெயரில் வெளியிட்டதற்கு பதிலாக மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி நட்சத்திர பேச்சாளா்கள் என வெளியிட்டிருக்க வேண்டும். அதனால் தான் முக்கிய அரசியல் தலைவா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மதச்சாா்பற்ற வெற்றிக் கூட்டணி பெயரில் மீண்டும் நட்சத்திர பேச்சாளா் பட்டியல் வெளியிடப்படும்.

அரசியல் கட்சிகளைச் சோ்ந்த ஒவ்வொருவருக்கும் தங்களது தலைவரை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது இயல்பு. அதேபோல் எங்களது கனவும், இலக்கும் விசிக தலைவா் தொல்.திருமாவளவனை தமிழக முதல்வராக்குவது தான் என்றாா் வன்னி அரசு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.