மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில்  7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மு.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முத்துமணி வரவேற்றார். முன்னா

News image
Updated On :5 ஜனவரி 2013, 9:07 pm

தினமணி

 தேனியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில்  7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 மாவட்டத் தலைவர் மு.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முத்துமணி வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து முன்னாள் மாவட்டத் தலைவர் பி.சிவக்குமார் பேசினார்.  மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் ஊதியக் குழு அறிவித்துள்ள சலுகைகள் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக் காலத்தை கணக்கிட்டு தேர்வுநிலை வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், தொழிற் கல்வி சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும், கல்வித் துறை அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

 உத்தமபாளையம் கள்ளர் பள்ளி சரகத் தலைவர் சரவணன், முன்னாள் மாநிலப் பொருளாளர் எத்திராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சத்தியேந்திரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.