எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

விழாக்களுக்காக வெட்டப்படும் மூங்கில் மரங்கள்:வன வளம் அழிவதைத் தடுக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டத்தில் திருவிழாக்களுக்காக ஏராளமான மூங்கில் மரங்களை வெட்டிவருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் திருவிழா ஆரம்பமாகும்போது, வனப்பகுதிக்குச்

Updated On :13 மே 2013, 12:20 am IST

தேனி மாவட்டத்தில் திருவிழாக்களுக்காக ஏராளமான மூங்கில் மரங்களை வெட்டிவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

 ஒவ்வொரு ஊரிலும் திருவிழா ஆரம்பமாகும்போது, வனப்பகுதிக்குச் சென்று மூங்கில் மரத்தை வெட்டி எடுத்து வந்து பூமி பூஜை செய்வர். இவ்வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

 தற்போது ஒன்று அல்லது இரண்டு மரங்களை வெட்டுவதற்கு பதிலாக ஏராளமான மூங்கில் மரங்களை வெட்டி வாகனங்களில் கொண்டு வருகின்றனர்.

 இதற்கு வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.

 பொதுவாக உயர்ந்த மரங்களான ஓக், பைன், யூகலிப்ட்ஸ், மூங்கில் போன்றவை  இயற்கையாகவே அதிக அளவில் மழையைத் தரக்கூடியவை.

 இப்படிப்பட்ட வளமிக்க நூற்றுக்கணக்கான மூங்கில் மரங்களை வெட்டுவது வனவளத்தை அழிக்கும் செயல் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

  எனவே இனிவரும் காலங்களில் திருவிழா என்ற பெயரில் மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.