போடியில் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை சப்பர ஊர்வலம்
போடி திருமலாபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் மண்டல பூஜை சப்பர ஊர்வலம் நடைபெற்றது.


போடி திருமலாபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் மண்டல பூஜை சப்பர ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது குருசாமி செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற பூஜையின் போது ஐயப்ப சுவாமியின் உருவப்படம் பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டு அதில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் ஐயப்பன் சப்பரம் திருமலாபுரம், ஜக்கமநாயக்கன்பட்டி, முதல்வர் காலனி ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் ஐயப்ப பக்தர்கள் சங்கிலிக்கருப்பன் உள்ளிட்ட வேடமிட்டு ஆடி வந்தனர்.
இதே போல் போடி ஐயப்ப பக்த சபை சார்பில் ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர் அய்யப்பன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக போடி நகர் முழுவதும் நகர்வலம் வந்த பின் மீண்டும் கோவிலை அடைந்தார். தொடர்ந்து புதன்கிழமை குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
போடி தருமத்துப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் குழுவினர் பங்கேற்ற மண்டல பூஜை நடைபெற்றது. அப்போது சப்பர ஊர்வலமும், குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...