தேனி அருகே நிலப் பிரச்னையில் தகராறு: இருவர் கைது
தேனி அருகே கோட்டூரில் நிலப் பிரச்சனையில் பெண்ணுடன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக செவ்வாய்க்கிழமை இருவரை போலீஸார் கைது செய்தனர்.


தேனி அருகே கோட்டூரில் நிலப் பிரச்சனையில் பெண்ணுடன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக செவ்வாய்க்கிழமை இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோட்டூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த தங்கமுத்து மனைவி ஈஸ்வரி (50). இவர், அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் (44) என்பவரது சகோதரியின் நிலத்தை விலைக்கு வாங்கி, விவசாயம் செய்துள்ளார்.
இந்த நிலத்தில் தனக்கும் பங்கு உள்ளதாக நடராஜன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடராஜன், அவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த செல்லப்பாண்டி (40) ஆகியோர், அந்த நிலத்திற்குள் சென்று நிலம் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியதாகவும், இதை கண்டித்ததால் இருவரும் தன்னுடன் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வீரபாண்டி காவல் நிலையத்தில் ஈஸ்வரி புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து நடராஜன், செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...