பெரியகுளத்தில் போலி செய்தியாளர் கைது
தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழ் அடித்து வசூலில் ஈடுபட்ட போலி செய்தியாளர் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.


தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழ் அடித்து வசூலில் ஈடுபட்ட போலி செய்தியாளர் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தேனியை சேர்ந்தவர் குருசீனிவாசன் (45) மற்றும் ஜான் மணி, வி.செல்வராஜ், சாதிக்பாட்ஷா ஆகியோர் தங்களை பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொண்டு, தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு போலி அழைப்பிதழ் அச்சிட்டு, அதில் தமிழக துணை முதல்வர் மற்றும் தேனி தொகுதி எம்பி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயரை போட்டு பண வசூலில் ஈடுபட்டுள்ளதாக தேனியை சேர்ந்த ராஜா முகமது என்பவர் தென்கரை காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, குருசீனிவாசனை கைது செய்தனர். மேலும் ஜான் மணி, செல்வராஜ், சாதிக்பாட்ஷா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...