கம்பத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்
கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் கம்பம் - கம்பமெட்டு சாலையில் நடைபெற்றது.


கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் கம்பம் - கம்பமெட்டு சாலையில் நடைபெற்றது.
ஒக்கலிகர் சமுதாய நாட்டாண்மை காந்தவன் தலைமை வகித்தார். பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான், நடுமாடு, பெரிய மாடு ஆகியவை பங்கேற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற, மற்றும் கலந்து கொண்ட 150 மாட்டு வண்டிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், மாட்டுவண்டி பந்தய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை கம்பம் ஒக்கலிகர் சமுதாயத்தினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...