தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்க பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை நீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்து சமயஅறநிலைத்துறை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனர்.
உத்தமபாளையம் முத்துக்கருப்பணசாமி கோயில் தெருவில் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்க பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 3,996 சதுர அடி காலியிடம் உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த பகவதி, பிச்சை மற்றும் சீனிவாசன் ஆகியோர் வாடகைக்கு எடுத்து இருந்தனர். மேலும் இவர்கள் இந்த இடத்தை உள்வடகைக்கு நல்லமுத்து, சுப்பிரமணி மற்றும் தேன்மொழி உள்ளிட்டோருக்கு விட்டிருந்தனர். இதற்கிடையே கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் இந்த இடத்துக்கு ரூ.3,07, 920 வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதை பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் செலுத்த வில்லை. இதனை அடுத்து மதுரை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் புதன்கிழமை, இந்து சமய உதவி ஆணையர் சிவலிங்கம், உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்தை மீட்டும் , அதில் கட்டப்பட்ட கட்டடத்தை பூட்டியும் சீல் வைத்தனர். இதன் மூலம் 9 செண்ட் இடம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் கூறியது: வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவையிலுள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் முறைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.