கடமலைக்குண்டு அருகே கணவர் கோயில் திருவிழாவுக்கு வராததால் மனமுடைந்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடமலைக்குண்டு அருகே பேச்சியம்மன் கோயில்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி சுமித்ரா (20). இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. பாஸ்கரன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுமித்ரா பேச்சியம்மன் கோயில்பட்டியில் உள்ள கோயில் திருவிழாவுக்கு வந்துள்ளார். அப்போது தனது கணவர் பாஸ்கரனையும் திருவிழாவுக்கு அழைத்தாராம். ஆனால் அவர் வேலை இருப்பதால் வர இயலாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுமித்ரா, சனிக்கிழமை விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அருகிலிருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சிவகிரியில் மே தினப் பேரணி

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

