தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது

தேனிமாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகள் திங்கள் கிழமை முதல் தொடங்கியது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:17 am IST

தேனிமாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகள் திங்கள் கிழமை முதல் தொடங்கியது. 
கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகள் திங்கள் கிழமை முதல் தொடங்கியது.  தேனிமாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் கூடலூரில் உள்ள ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகளை,  பூமி பூஜை செய்து கம்பம் பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பினர் தொடங்கி வைத்தனர். 
குளத்தில் உள்ள மண் மற்றும் களிமண்களை விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் போன்ற வற்றை விண்ணப்பத்துடன் இணைத்து இலவசமாகவே எடுத்துக்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
வணிக நோக்கில் மண் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 500 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசனம் பெறும் அளவில் அமைந்துள்ள ஒட்டான்குளம் சுமார் 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. 
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே குளத்தில் தண்ணீரின், கொள்ளளவு அதிகரிக்கும் என்றும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.