போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள் கிழமை ஜீப், இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் கணவன் மனைவி காயமடைந்தனர்.
போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிவாசகன் (35). இவருக்கு சொந்தமான தோட்டம் கஜானாப்பாறையில் உள்ளது. தோட்டத்திற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மணிவாசகமும் இவரது மனைவி மேனகா (25) என்பவரும் சென்றனர். போடிமெட்டு மலைச்சாலை எஸ் வளைவு அருகே சென்றபோது அதிவேகமாக வந்த ஜீப், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மணிவாசகம் மற்றும் மேனகா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜீப்பை ஓட்டி வந்த போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த மணிவேல் (23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

காவல்கார கருப்பு மேக்கிங் விடியோ!

இந்த வாரம் கலாரசிகன் - 31-05-2026

கூடலழகர் கோயில் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


