மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

ஆண்டிபட்டி அருகே இளைஞரை கொன்று சடலம் கிணற்றில் வீச்சு

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 12:59 am IST

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னத்துரை என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ஆண்டிபட்டி போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண், வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவரை 2 நாள்களுக்கு முன்பு யாரோ கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு சென்று இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். இறந்தவர் குறித்த விவரம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.  
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார்.  இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.