காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஸ்கேட்டிங் போட்டி: கல்லூரி மாணவர் வெற்றி

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவருக்கு, கல்லூரி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தியது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 6:25 am IST

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவருக்கு, கல்லூரி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தியது.
       கோயம்புத்தூரில் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில், அங்குள்ள ஸ்வஸ்திகா ஸ்கேட்டிங் வளாகத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  மாநில அளவில் பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.   
     இதில் 16 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவர் ஜெயபாலாஜி பங்கேற்று, ரிங் 500 மற்றும் 700 மீட்டர்  பிரிவில் முதலிடமும், 1000 மீட்டர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்று 3 பரிசுகளை வென்றுள்ளார். 
     இம் மாணவரை கல்லூரியின் தாளாளரும், செயலருமான தர்வேஷ் மைதீன்,  கல்லூரி முதல்வர் முகமது மீரான் மற்றும் உடற்கல்வி இயக்குநர் அக்பர் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.