திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தினால், அமமுகவே வெற்றி பெறும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத். தமிழ்ச்செல்வன் கூறினார்.
ஆண்டிபட்டியில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் தற்போது அமமுக துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அவர், தேனி மாவட்ட மக்களை விரைவில் சந்திக்க உள்ளார்.
தேனி மாவட்டத்தில் அமமுகவில் 2.50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு, கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் இறந்துவிட்டதால் முறைப்படி அத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தினால், அமமுகவே வெற்றி பெறும். தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, இரவோடு இரவாக அவர்களின் வீடுகளுக்கே சென்று பணி ஆணைகளை அதிகாரிகள் மூலம் வழங்கிய மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை பாராட்டுகிறோம் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

