இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

அன்னை தெரசா பல்கலை. கல்லூரிகளுக்கிடையேயான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான கோகோ விளையாட்டுப்போட்டிகள்

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான கோகோ விளையாட்டுப்போட்டிகள் பெரியகுளம்  ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த போட்டியின் தொடக்க விழாவுக்கு அன்னை தெரசா பல்கலை. விளையாட்டுத்துறை இயக்குநர் எ.ராஜம் தலைமை வகித்தார்.  ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி முதல்வர் சேசுராணி போட்டியினை தொடங்கி வைத்தார்.  பள்ளிகளின் உடற்கல்வி ஆய்வாளர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இப்போட்டியில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 11 பெண்கள் கல்லூரிகளின் மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இரு நாட்கள் நடைபெறுகின்றன.  முன்னதாக கல்லூரிச் செயலாளர்  குயின்சிலி ஜெயந்தி வரவேற்றார்.  இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஆன்டனி சுதா செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.