
உத்தமபாளையம் அருகே ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் இணைப்புச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி முதல் புலிக்குத்தி வரையிலான பகுதியில் வாழை, தென்னை உள்பட பல்வேறு விவசாயப் பணிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இப்பகுதியில் விவசாயிகள் விளைவித்த பொருள்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல சரக்கு வாகனங்கள் சென்று வர சாலை வசதியில்லாத நிலையில் மிகவும் சிரமப்பட்டனர். அதனைத் தொடர்ந்து உ.அம்மாபட்டி முதல் புலிக்குத்தி வரையில் இணைப்புச் சாலை அமைக்க விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. இதில் இடைப்பட்ட 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைப்பு பணி கடந்த ஓராண்டுக்கு மேலாக மிக மந்தமாக நடைபெறுகிறது. சாலைப் பணிகள் முழுமை பெறாத நிலையில் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு , வாகனங்களும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




