ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஆண்டிபட்டி அருகே 3 மாதங்களாக குடிநீர் வழங்காததால் கிராம மக்கள் அவதி

ஆண்டிபட்டி அருகே உள்ள வேலாயுதபுரத்தில் 3 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 7:25 am IST

ஆண்டிபட்டி அருகே உள்ள வேலாயுதபுரத்தில் 3 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சண்முகசுந்தரபுரம்  ஊராட்சிக்குள்பட்ட வேலாயுதபுரம் கிராமத்துக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குன்னூர் வைகை ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. 
மேலும் ஆழ்துளை கிணறு மூலமும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. குடிநீர் வழங்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், 3 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் குடிநீர் வழங்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் ஆழ்துளை கிணற்றிலும்  நீர் போதுமான அளவில் இல்லை. இதனால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெண்கள்  குடிநீருக்காக வெகு தொலைவில் உள்ள தனியார் தோட்டங்களுக்குச் சென்று விவசாய கிணறுகளில் இருந்து நீர் எடுத்து வர வேண்டி உள்ளது. ஒருசில நேரங்களில் அங்கும் தண்ணீர் பிடிக்க அனுமதிப்பதில்லை. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனஅவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக இக்கிராமத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.