குமுளி மலைச்சாலையில் பழுதான லாரியால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
குமுளி மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால், ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பேருந்து பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


குமுளி மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால், ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பேருந்து பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்கும், கூடலூர்- குமுளி மலைச்சாலை 6 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கேரள மாநிலம் கோட்டயத்துக்கு இந்த மலைச் சாலை வழியாக ஒரு லாரி சென்றது. காலையில் 11 மணிக்கு வழித்துணை மாதா கோயில் வளைவுப் பாதையில் சென்ற போது பழுதாகி சாலையின் நடுவே நின்று விட்டது.
இதனால் இருபுறமும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் குமுளி காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப் பின், அந்த லாரி பழுது நீக்கப்பட்டு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...