ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவியப் போட்டி

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டியில் 5 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:13 am

DIN

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டியில் 5 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
 போடி அரிமா சங்கம் சார்பில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி, ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10-வது பகுதி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 120 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆர்.நித்யா, எஸ்.பானுப்பிரியா, வி.தஷ்வின் ஆகிய மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்த்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றி பெற்றனர். மாணவர்கள் இ.ராஜேஸ்வரி, வி.ஜோயல் ஆகியோர் எதிர்கால உலக அமைதி என்ற தலைப்பிலும், எஸ்.தாரணி, ஏ.சரவணபாண்டியன் ஆகியோர் வனம், காடு, சோலை வளங்கள் என்ற தலைப்பிலும் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் இரா.பிருதிவிராஜ் தலைமை வகித்தார். போடி அரிமா சங்க தலைவர் குணசேகரன், பொருளாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். உதவி தலைமையாசிரியர் செந்தில் நன்றி கூறினார். 
இதேபோல் மற்ற 4 பள்ளிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.