ஆண்டிபட்டி அருகேயுள்ள கொட்டோடைப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா புள்ளிமான்கோம்பை ஊராட்சியில் உள்ளது கொட்டோடைப்பட்டி கிராமம். மலை அடிவாரத்திலுள்ள இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளான கழிவுநீர் வாய்க்கால், தெருவிளக்கு, மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி என எதுவும் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பேருந்து வசதி இல்லாததால், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 4 கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்லவேண்டியிருக்கிறது. சாலை வசதி இல்லாததால், பேருந்தை இயக்க முடியவில்லை என போக்குவரத்து நிர்வாகத்தினர் தெரிவிப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், பிரசவம் உள்ளிட்ட அவசரக் காலங்களில் நோயாளிகளை இரு சக்கர வாகனம் அல்லது ஆட்டோவில் 15 கிலோ மீட்டர் தொலைவு கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. இதில், சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள அங்கன்வாடி மையம் அருகே 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ள இந்த கிராமத்தில் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கே. பாக்யராஜ் மறைவு பேரிழப்பு; இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய்

தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்! ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

ஆண்களின் உலகம்: பாக்யராஜின் மௌன கீதங்கள்... சென்சாரில் 4 பெண்கள்!





