உலக சுற்றுச்சூழல்தினவிழா மஞ்சளாறு அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் சாத்தாகோவில் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். மஞ்சளாறு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்போது சுற்றுச்சூழல் தின விழா குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. சுற்றுச்சூழல்விழிப்புணர்வு பேரணியை வனச்சரக அலுவலர் சுரேஷ் தொடக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் வனவர் ஜெயராஜ், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








