அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு  விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணித்தும், மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளனர்.

Updated On :29 மார்ச் 2018, 7:55 pm

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணித்தும், மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளனர்.
 ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமையன்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் புதியதோர் இணையதளம் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட செய்தி தொடர்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆண்டிவேல், சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்டத்தலைவர் ஆர்.ராஜாக்கிளி, மாவட்டச் செயலர் க.சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் 
ஆர்.கிருஷ்ணாதாஸ், மாவட்ட அமைப்புச்செயலர் சே.காஜாமைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 பணி பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் 10-ம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்பணியை புறக்கணிப்பது மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆசிரியர் ஆர்.இளங்கோ நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.