தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் - மேகமலை நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஹைவேவிஸ் - மேகமலை சாலை 52 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் 7 மலைக்கிராமங்கள் உள்ளன. தனியார் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதியில் சுமார் 3000 கூலித்தொழிலாளர்கள் உள்பட 8 ஆயிரத்திற்கும் அதிமான பொதுமக்கள் வசிக்கின்றனர்.
தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இச்சாலையை முறையாக பராமரிப்பு செய்யாத நிலையில் போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக மாறியது. 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இச்சாலை வழியாக செல்லும் பேருந்துகள் விபத்தில் சிக்கின.
பொதுமக்களின் பல்வேறு போட்டங்களை தொடர்ந்து இச்சாலையை அரசு கையகப்படுத்தி கையப்படுத்தி மலைச்சாலையை பராமரிப்பு செய்ய திட்டமிட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு இந்தச் சாலை அமைக்க அரசு ரூ.80.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யதது. இதனைத்தொடர்ந்து 3 ஆண்டாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 32 கிலோ மீட்டர் வரையில் மட்டும் நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைத்து வருகின்றனர்.
இந்தச்சாலையை தரமற்ற முறையில் அமைப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டப்படி 3 மீட்டர் சாலையை 5.5 மீட்டராக அகலப்படுத்த வேண்டும். ஆனால் பல இடங்ளில் குறுகிய சாலையாக காட்சியளிக்கிறது.
மேலும் சாலையோரங்களில் மழைநீர் செல்வதற்காக அமைத்துள்ள கால்வாய்களும் தரமற்றதாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, தமிழக அரசு தரமான முறையில் பாதுகாப்பான சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மலைக்கிராம மக்களின் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

