குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் 18 கால்வாய்களின் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் தயார்

இந்தாண்டு தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால்,  18 கால்வாய்களின் வழியாக தண்ணீர்

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

இந்தாண்டு தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால்,  18 கால்வாய்களின் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக பெரியாறு அணை சிறப்பு கோட்டப்பிரிவு அலுவலர்  தெரிவித்தார்.
 தற்போது கோடை வெயிலை தணிக்க ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும் மக்கள் எதிர்பார்ப்பது தென் மேற்கு பருவ மழையைத்தான். இது, மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்திலோ அந்தமான், லட்சத்தீவு பகுதிகளில் தொடங்கும். அது போல் இந்தாண்டும், வரும் மே, 19 அல்லது, 20 ஆம் தேதிகளில் அந்தமானில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் எனவும், கேரளாவில் மே 22 ஆம் தேதி தொடங்கும் எனவும்  வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு இம்பருவமழை 10 நாள்களுக்கு முன் கூட்டியே தொடங்குகிறது. மேலும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை நன்கு பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை இருப்பதாலும், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்குவதாலும், அணை பொறியாளர்கள், கம்பம் பள்ளத்தாக்கு நீர்ப்பாசனப் பிரிவு பொதுப்பணித்துறையினர் பாசனத்துக்கு, 18 கால்வாய்களின் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல தயார் நிலையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்று பெரியாறு அணை சிறப்பு கோட்டப்பிரிவு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் மூத்த விவசாயி ஒருவர் கூறியதாவது: தேனிமாவட்டத்தில் குளம் கண்மாய்களை, தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்குவதால் இப்பணிகளை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.