மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வீரபாண்டியில் செல்லிடப்பேசி திருடிய 3 பேர் கைது

வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவை காணச் சென்றிருந்தவரின் செல்லிடப்பேசியை திருடியதாக 3 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

Updated On :14 மே 2018, 7:15 pm

வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவை காணச் சென்றிருந்தவரின் செல்லிடப்பேசியை திருடியதாக 3 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
தேனி, பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் சரவணக்குமார்(27). இவர், வீரபாண்டிக்கு சித்திரை திருவிழாவை காணச் சென்றுள்ளார். அங்கு வீரபாண்டி, கிழக்குத் தெருவைச் சேர்ந்த சக்திவேல்(23), கருப்பசாமி(23), பழனிக்குமார்(20) ஆகியோர், சரவணக்குமார் தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்லிடபேசியை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. சரவணக்குமார் மற்றும் அப் பகுதியில் இருந்தவர்கள், மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சரவணக்குமார் அளித்த புகாரின் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சக்திவேல், கருப்பசாமி, பழனிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.