தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர்மழை காரணாக நீர் வரத்து அதிகமானதால் கண்மாய், குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கம்பம் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் முல்லைப் பெரியாறு பாசன நீர் மூலமாக மாவட்டம் முழுவதும் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவுக்கு விவசாயம் செய்யப்படுகிறது. அதேபோல பருவமழையை நம்பியும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக போதுமான பருமவழை இல்லாத தால் விவாயம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் நிலத்தடிநீர் மட்டமும் குறைந்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. :இதனால் சின்னமனூரை சுற்றியுள்ள கண்மாய்கள், குளங்கள் மழைநீரால் நிரம்பி காட்சி யளிக்கின்றன. மழை நீரின் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில்
கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள கண்மாய்களுக்கு நீர் வரத்திற்கு ஆதாரமாக இருக்கும் ஓடைகள் உள்ளிட்டவை சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் நீர் நிலைக்களுக்கு வரும் நீர் வரத்து பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதே போல் கண்மாய்களையும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
எனவே உத்தமபாளையம் , சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் இன்னும் அதிக பரப்பளவுக்கு விவசாயம் செய்ய இயலும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

