கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், கேரளத்தில் இருந்து தமிழகப் பகுதிக்கு காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவப் பணிகள் மற்றும் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் அந்த நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கேரளத்தில் இருந்து குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகள் வழியாக தமிழகத்திற்கு காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை, மருத்துவ நலப் பணிகள் மற்றும் பொதுச் சுகாதாரத் துறையினர் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
வெளவால் கடித்த பழங்கள் மற்றும் பன்றிகள் மூலம் நிபா வைரல் பரவும் வாய்ப்பு உள்ளதால், இது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட வன அலுவலர் கௌதமன், மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சக்திவேல், பொதுச் சுகாதார துணை இயக்குநர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


