2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

டி.சுப்புலாபுரத்தில் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் தார்ச்சாலை அடியோடு பெயர்ந்து சேதமடைந்துள்ளது.

Published On :

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் தார்ச்சாலை அடியோடு பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமம் உள்ளது. தேனி- மதுரை சாலையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில்   உள்ள இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலைத்துறை வசம்  உள்ளது. இந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. 
மீதமுள்ள 1 கிலோமீட்டர் தூரமுள்ள சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.  10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலை தற்போது அடியோடு பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால்  நெசவாளர்கள் உற்பத்தி பொருள்களை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள்,வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.சேதமடைந்த சாலை முழுவதும் கற்கள் சிதறி கிடப்பதால் இந்த வழியாக வரும் பாதசாரிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர். 
சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் சேதமடைந்து காணப்படும் ஊராட்சி ஒன்றிய சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும்,நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.