
போடி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீசங்கரநாராயணன் சுவாமி சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் ஸ்ரீசங்கர நாராயணன் சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஒரே கல்லில் சிவபெருமானும், திருமாலும் இணைந்த வடிவமாக சங்கரநாராயணன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலை பிரதிஷ்டை விழாவுக்கு கோயில் தலைவர் டி.முத்துச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் எம்.போஸ், பொருளாளர் கே.குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோயில் அர்ச்சகர் பி.சேகர் பூஜை ஏற்பாடுகளை செய்தார்.
பிரதிஷ்டை நிகழ்ச்சியை முன்னிட்டு சங்கரநாராயணனுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி, பால், தயிர், தேன், பழங்கள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் போடி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சுவாமிக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






