நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சாரைப் பாம்பு பிடிபட்டது

போடியில் டாஸ்மாக்கடையில் செவ்வாய்க்கிழமை புகுந்த ஏழரை அடி நீளமுள்ள சாரைப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:16 am IST

போடியில் டாஸ்மாக்கடையில் செவ்வாய்க்கிழமை புகுந்த ஏழரை அடி நீளமுள்ள சாரைப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
 போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோயில் தெருவில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இக்கடையின் ஊழியர் சக்தி செவ்வாய்க்கிழமை கடையை திறந்தபோது, சாரைப் பாம்பு இருந்ததை கண்டு, போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, ஏழரை அடி நீளமுள்ள சாரைப் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்து, வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.