நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

போடி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

போடி அருகே பால் விலையை உயர்த்த வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:17 am IST

போடி அருகே பால் விலையை உயர்த்த வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் அரசு பொது நூலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் பசுமாடுகளுடன் பங்கேற்றனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். இதில், பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், மாட்டுத் தீவனங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.